• Mon. Apr 21st, 2025

தன்னை எம்ஜிஆரைப் போலவே நினைத்துக் கொள்கிறார்கள் நடிகர்கள்…செங்கோட்டையன் ஆவேசம்

ByPrabhu Sekar

Mar 2, 2025

எம்.ஜி.ஆர் போல் நடிகர் கட்சி துவக்கி மனக்கோட்டை கட்டுவதாக காட்டமாக பேசினார்நலத்திட்டம் கொடுக்க கொண்டுவந்த புடவைகளை பண்டல் பண்டலாக மீண்டும் ஆட்டோவில் ஏற்றி சென்றால் பெண்கள் ஏமாற்றம், ஒருபெண் வெகு நேரம் கெஞ்சியும் புடவை கொடுக்காமல் ஒளிப்பதிவு செய்த நபரை மிரட்டல் தொனியில் பேசிசென்ற அதிமுகவை சேர்ந்த நபரால் பரபரப்பு

தாம்பரம் சண்முகம் சாலையில் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77ம் ஆண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம் தாம்பரம் மத்திய பகுதி அதிமுக செயலாளர் எல்லார் செழியன் தலைமையில் நடைபெற்றது,இதில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன், நடிகர் சுந்தர்ராஜன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்,

அப்போது பேசிய முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் தற்போதைய பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசாமல் அதிமுகவை தோற்றுவித்த தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சேவை மனப்பான்மையை பேசினார்,திரைப்படத்தில் நடித்து சம்பாதித்த பணத்தில் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுனர்களுக்கு மழைகோர்டு கொடுப்பதும் ஏழை எளியோர் நலன் சிந்தனைகளை முன் நிறுத்தி பணியாற்றியவர் எம்.ஜி.ஆர் என கூறினார்,

ஆனால் தற்போது கட்சி துவங்கி எம்.ஜி.ஆர் போல் மனக்கோட்டை கட்டி செயல்படுகிறார்கள் என ( புதிய தாக கட்சி துவங்கிய விஜய் சாடினார் )பொதுக்கூட்டத்தில் நலத் திட்டம் கொடுக்க பண்டல் பண்டலாக புடவைகள் கொண்டுவந்து காட்சிப்படுத்திய நிலையில் மேடையில் புடவையை வழங்கா அதிமுக வினர் ஆட்டோவில் ஏற்றி சென்றனர்,

அங்கு ஒரு பெண் ஒரு புடவை கொடுங்க, பணம் புடவைகொடுக்க சொல்லி கூப்பிட்டிங்க தரமாட்ரிங்க என கெஞ்சியும் தர மறுத்து ஆட்டோவில் அதிமுகவினர் கொண்டு சென்றனர்,

அப்போது செய்தியாளர்கள் ஒளிபதிவு செய்தபோது புடவையை திருப்பி கொண்டு செல்வதாக செய்தி போடப்போரிங்க இப்படி செய்தி ஏன் போடுரிங்க என மிரட்டல் தொனியில் அதிமுகவை சேர்ந்தவர் பேசிசென்றார்.