• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடிகர் விஜய்யின் கல்வி விருது விழா தொடக்கம்

Byவிஷா

Jun 28, 2024

10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கொளரவிக்கும் வகையில், நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதல் கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் முதற்கட்டமாக 800 மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்குள் வருகை தந்த விஜய், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் சின்னதுரை அருகே அமர்ந்தார். பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. தவெக கட்சியை தொடங்கிய பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதால், அவர் என்ன பேசுவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.