தமிழில் வெளியான கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, காதலுக்கு மரணமில்லை, காந்தம், உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் தேஜ். தற்போது கன்னடத்தில் ராமாச்சாரி 2.O என்கிற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இந்த படத்தில் மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகன்களில் ஒருவரும் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரின் சகோதரருமான ராகவேந்திரா ராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தேஜ் வில்லனாக நடிக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து GOD (Glory Of Daemon) என்கிற நேரடி தமிழ் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் மறுபிரவேஷம் செய்கிறார்தேஜ்இந்த படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.