• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் தனது வாக்கினை பதிவு செய்த பின் நடிகர் சௌந்திரராஜா பேட்டி..,

ByP.Thangapandi

Apr 23, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருகட்டான்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் இன்று தவெக விஜய் ஆதரவாளரும், நடிகருமான சௌந்திரராஜா தனது ஜனநாயக கடமையாற்றினார்.,

தனது தாய் மற்றும் சகோதரர் உடன் வந்து வாக்களித்த நடிகர் சௌந்திரராஜா, ரொம்ப சந்தோசமான நாள், ஒரு தலைமுறை மாற்றத்திற்கான தேர்தல் இந்த 2026 தேர்தல், இந்த தருணத்தில் மகிழ்ச்சியும், பெரிய சந்தோசமும் இருக்கிறது.

மாற்றம் வேண்டும் என நினைக்கும் மக்கள், நல்ல ஆட்சி, மக்களாட்சி வேண்டும், அடிப்படை தேவைகளை தீர்க்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையோடு நடைபெறும் தேர்தல் நானும் வாக்களித்துள்ளேன்., Result க்காக Waiting.

நேற்று வரை மிக பெரிய எழுச்சி, எங்கு போனாலும் கடல் அலை போல குவிந்தார்கள், எனக்கு சான்று என்னவென்றால், எனது அம்மா, எல்லோருமே மாறியுள்ளார்கள் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் சந்தோசம்.

பல வருடங்களாக மாறாத வயதானவர்கள் கூட மாறியுள்ளார்கள் என்பது மிக பெரிய புரட்சியாக பார்க்கிறேன் என பேசினார்.