நடிகர் கார்த்தி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை நடிகர் கார்த்தி சுவாமி தரிசனம் செய்தார். “விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக மதுரை வந்துள்ள நடிகர் கார்த்தி இன்று அதிகாலை தரிசனம் செய்தார். அப்போது அங்கு கூடிய ரசிகர்களிடம் பேசி மகிழ்ந்தார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி ,அதிதி சங்கர் நடிக்கும் விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகவுள்ளது.