• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நடிகர் கமல் கரங்களை பிடித்து முத்தமிட்ட பாலிவுட் நடிகர்!

Byகாயத்ரி

Sep 12, 2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன் இதுவரை நடிக்காத கதாப்பாத்திரங்களே இல்லை என்னும் அளவுக்கு ஏராளமான படங்களில் தன் 60 ஆண்டுகால சினிமாபயணத்தில் செய்துவிட்டார்.

இருந்தாலும் இன்றைய இளம் நடிகர்களுக்கு கமல், நடிப்பில், தொழில் நுட்பத்தில், இயக்கத்திலும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் ரூ.500 கோடிக்கு மேலான வசூலே சாட்சி. இந்த நிலையில், சமீபத்தில் சினிமா நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது, அவர் கரங்களைப் பற்றிக்கொண்ட முன்னணி நடிகர் ரன்வீர் சிங், முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், ரன்வீர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஐகான் என்று பதிவிட்டு, கமலின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனால் தான் அவரை ஆண்டவர் என்று கூறுகிறார்கள் போல..