• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சூப்பர் குட் பிலிம்ஸ்-ன் 100-வது படத்தில் விஜய்.. நடிகர் ஜீவா உறுதி..!!

Byகாயத்ரி

Sep 12, 2022

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எல்லா சினிமா ரசிகர்களையும் தன் அழகான நடிப்பால் கட்டிப்போட்டவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவுல இப்போ மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நடிகரும் இவர் தான். இவரை தன் தயாரிப்பில் நடிக்க வைக்க நீ நான் என்ற போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் ஜீவாவின் தந்தையும், தயாரிப்பாளருமான ஆர்.பி. சவுத்ரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜயன் ஒரு படத்தை தயாரிக்க உள்ளாராம். சமீபத்தில் நடைபெற்ற ஆஹா OTT பிளாட்பார்ம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது நடிகர் ஜீவா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதைப்பற்றி பேசிய ஜீவா, சூப்பர் குட் பிலிம்ஸ்-ன் 100-வது படத்தில் விஜய் சார் நடிக்க வாய்ப்பு உள்ளது. அவரிடம் 1 வாரம் முன்பு தான் பேசினோம். ஆண்டவன் அருளால் அது நடக்கும். அதற்கு விஜய் நான் சம்பளம் வாங்காமல் நடிக்க ரெடி” என்றும் தெரிவித்திருக்கிறார். தற்போது தளபதி வாரிசு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.