• Sat. Apr 27th, 2024

பிக்பாஸ்-6- நடிகர் கமலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ByA.Tamilselvan

Sep 12, 2022

பிக்பாஸ் 6 ஒளிபரப்பாக உள்ள நிலையில் நடிகர் கமலின் சம்பளம் வெளியாகி உள்ளது. தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்தில் இருந்தே தொகுத்து வழங்கி வருகிறார்.தற்போது பிக்பாஸ் சீசன் 5 முடிந்து இன்னும் சில நாட்களில் சீசன் -6 துவங்கவுள்ளது. அதற்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வரதொடங்கியுள்ளது. சீசன் 6க்கும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுப்பாளராக உள்ளார். இந்நிலையில் இந்த சீசனுக்கு அவருக்கு ரூ75 கோடி ச ம்பளம் பேசப்பட்டுள்ளது.கடந்த சீசனில் ரூ55 கோடி வாங்கியிருந்த நிலையில் இந்த முறை அதிரடியாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். சினிமாவிலும் அவர் தனது சம்பளத்தை ரூ130 கோடியாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *