• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

நடிகை சமந்தாவை பிரபல நிகழ்ச்சியில் தூக்கிய நடிகர் அக்ஷய் குமார்…வாயை பிளந்த ரசிகர்கள்…

Byகாயத்ரி

Jul 19, 2022

நடிகை சமந்தா தனது விவாகரத்துக்கு பின் அவரது கேரியரில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவர் கைவசம் பல படங்கள் இருக்கும் நிலையில் அடுத்த ஹிந்தியிலும் களமிறங்க இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் அவர் காபி வித் கரண் ஷோவில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உடன் கலந்துகொண்டிருக்கிறார். அவர்கள் செட்டுக்குள் ஒன்றாக தான் நுழைகின்றனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமந்தாவை அக்ஷய் தன் கைகளில் அசால்ட்டாக தூக்கி வருகிறார்.இது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.மேலும் சமந்தாவின் திருமணம் விவாகரத்தில் முடிந்தது பற்றி கரண் ஜோகர் சமந்தாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார். சமந்தா சொன்ன முழு பதில் என்ன என்பது முழு எபிசோடும் வெளிவந்தால் தான் தெரியவரும்.