தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு எங்களுக்கு வேணும் என சுக்குவாடன்பட்டி பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து சுடுகாட்டில் பொதுமக்கள் முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ள சுக்குவாடன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு பாத்தியபட்ட சுடுகாடு தேனி-பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு பல ஆண்டுகளாக சுடுகாடு இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்ணையாத்தேவர் என்பவர் தனக்கு சொந்தமான சுமார் 10 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்தார்.
அந்த நிலத்தில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி சார்பில் தாய் திட்டத்தில் 2011 மற்றும் 2012 ஆண்டு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு எரிவுட்டும் கொட்டகை ,போர் மற்றும் தடுப்புச் சுவர் என அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுடுகாட்டில் இக்கிராம மக்கள் இறந்தவர் சடலத்தை எரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த கொரோனா தொற்று காலத்தில் இறந்தவரின் உடலை கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எரித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொம்மையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நகராட்சி சார்பாக சுடுகாடு கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் பொம்மையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் சுக்குவாடன்பட்டி கிராமத்தில் இருக்கும் சுடுகாட்டில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று சமூக வலைதளங்களிலும் சுவரொட்டிகளும் ஒட்டி ஊருக்கு கெட்ட பேர் ஏற்படுத்தும் வகையிலும் பிரச்சனை ஏற்படுத்தும் வகையிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்று சுக்குவாடம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரனிடம் இந்த சுடுகாடு பிரச்சனை குறித்து மனு அளித்தனர்.
பின்னர் நூற்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் திரண்டு தேனி சுக்குவாடன்பட்டியில் உள்ள தேனி பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் உருவானது.