• Fri. Dec 13th, 2024

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றுள்ள நடிகர் அஜித் அணி…

Byகாயத்ரி

Jul 30, 2022

அஜித் நடித்து வரும் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அஜித் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித் ஐரோப்பாவில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவர் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்றார். திருச்சியில் நடைபெற்று வரும் துப்பாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் கலந்து கொண்ட படங்கள் இணையதளங்களில் வைரலாகின. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அணி நான்கு தங்கம், இரண்டு வெண்கலம் வென்றுள்ளனர். ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர், 50 மீ பிரீ பிஸ்டல் மாஸ்டர் உள்ளிட்ட பிரிவுகளில் அஜித்தின் அணி வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளது.