மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், கனிமொழி எம்.பி ட்வீட்.
இன்று மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து, கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ‘மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று. இது போன்ற வன்முறைகள் நடக்காதவாறு அனைத்து வழிகளிலும் கவனத்துடன் செயல்படுவோம். இதை முற்றிலும் ஒழிக்க, இது குறித்த உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார்.