• Thu. Dec 5th, 2024

பேரூராட்சி செயலாளர்கள் மீது நடவடிக்கை

ByJeisriRam

Nov 27, 2024

எஸ்சி எஸ்டி தூய்மை பணியாளர்களை தூய்மைப்பணிக்கு ஈடுபடுத்தி விட்டு, மாற்று சமூக தூய்மை பணியாளர்களை தூய்மை பணிக்கு ஈடுபடுத்தாத பேரூராட்சி செயலாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசு தொற்சங்கம் கட்சி கோரிக்கை.

தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகளில் பணியாற்றிய வரும் எஸ்சி எஸ்டி தூய்மை பணியாளர்களை தூய்மைப் பணிக்கு ஈடுபடுத்தி விட்டு, மாற்று சமூக தூய்மை பணியாளர்களை தூய்மை பணிக்கு ஈடுபடுத்தாமல் மாற்றுப் பணிக்கு ஈடுபடுத்தும் பேரூராட்சி செயலாளர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசு தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் ஜெகநாதன் கோரிக்கை விடுத்துள்ளது.

தேனி மாவட்டத்தில் ஜாதி ஆணவபோக்குடன் தூய்மை பணியில் எஸ்சி. எஸ்டி பணியாளர்களை மட்டுமே வேலை வாங்குவதன் மூலம் தீண்டமையை கடை பிடிக்கும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க பல புகார்களை பேரூராட்சி அரசு செயலாளர், பேரூராட்சி இயக்குநர், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர், தேனி மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல செயலர் மற்றும் உறுப்பினர் அவர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்து துப்புரவு பணியாளர்களை தூய்மை பணிக்கு அனுப்பாமல் மெத்தன போக்கோடு சாதியை பாகுபட்டை கடைபிடித்து வரும் பேரூராட்சி செயலர் அலுவலர் மீது வருகின்ற 05.12.2024ம் தேதிக்குள் வன்கொடுமைகள் திருத்தச்சட்டம் 2015ன் படி பேரூராட்சி செயல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தூய்மை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சமூக தூய்மை பணியாளர்களை தூய்மைபணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தவறும்பட்சத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிக்குட்பட்ட காவல் நிலையங்களில் செயல் அலுவலர்கள் மீது மற்றும் சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளர்கள் மீது வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் 2015ன் படி பாதிகப்பட்ட துப்புரவு பணியாளர்கள் மூலமாக புகார் கொடுக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *