விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள முத்தாண்டியாபுரம் கிராமத்திற்கு கட்டுமான பணிக்காக தென்காசி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சரளை மண் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது.

முத்தாண்டியாபுரத்தில் இருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் மெயின் ரோடு தெற்கு அப்பனம்பட்டி இணைப்புச் சாலை அருகே உள்ள வளைவில் லாரி திரும்பிய போது டிரைவர் கட்டுப்பாட்டை மீறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

கோவில்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் மாரியப்பன் (வயது 42) காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




