• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ரெட்டைமலை சீனிவாசன் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய வி. சி. க கட்சியினர்..,

Byமுகமதி

Sep 19, 2026

பொன்னமராவதி கிழக்கு நகர செயலாளர் சுசி.மெய்யநாதன் அவர்களின் தலைமையில் பொன்னமராவதி பழைய பேருந்து நிலையத்தில் திவான்பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் திருமயம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சி.திலீபன்ராஜா, சிவகங்கை பாராளுமன்ற தொகுதி மண்டல செயலாளர் செ.பெரியசாமி, மண்டல துணைச்செயலாளர் (பொது நிர்வாகம்) சங்கு.உதயகுமார், மண்டல துணைச்செயலாளர் சின்னுபழகு, மாநில துணைச்செயலாளர் வீர.விடுதலைவேந்தன், மாவட்ட பொருளாளர் வார்ப்பட்டு சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர்கள் அ.துரைச்சாமி, கேப்டன் முருகேஷ், சி.க.மணிமுத்து, செ.அழகுமீனாள், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் திரு.முத்துவளவன், துணைநிலை அமைப்புகளின் மாவட்ட அமைப்பாளர்கள் கரு.பழ.புரட்சியாளன், மருத்துவர் ச.செல்வகுமார், லெ.சிவசங்கர், ஆ.சிவமணி ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினார்கள்.

பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் வேந்தன் வெ.சேதுராமன் வரவேற்புரை ஆற்றினார். பொன்னமராவதி வடக்கு ஒன்றிய செயலாளர் கல்லம்பட்டி இளையராஜா, திருமயம் வடக்கு ஒன்றிய செயலாளர் அம்மையப்பன், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் தமிழ்மணி, நவமணி, சேகர், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ஒன்றிய செயலாளர் அருண்வளவன், பொன்னமராவதி மேற்கு நகர பொருளாளர் முருகையா, துணைச் செயலாளர்கள் ஆசைத்தம்பி, பாலமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் பொன்.நாகராஜன் நன்றியுரை ஆற்றினார்.