• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ரயில் இன்ஜினில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ரயில் கிளம்புவதில் சிக்கல்..,

ByKalamegam Viswanathan

Sep 19, 2026

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய பாசஞ்சர் ரயில் ஆனது இன்று மதியம் 12:15 அளவு மணி அளவில் ராமேஸ்வரம் புறப்பட்டது. சில நிமிடங்களிலே ரயில் இன்ஜினில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ரயில் கிளம்புவது சிக்கல் ஏற்பட்டது.

உடனடியாக மதுரை ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பொறியாளர்கள் ரயில் இன்ஜினில் மின் இணை வராதது தெரிய வந்தது உடனடியாக பொறியாளர்கள் ரயில் இன்ஜினில் ஏற்பட்டுள்ள பழுது சரி செய்து சுமார் 45 நிமிடம் தாமதத்திற்கு பின்பு ரயில் ஒரு மணி எட்டு நிமிடத்திற்கு புறப்பட்டது. ராமேஸ்வரத்திற்கு இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் ரயில் வர தாமதம் ஆனால் கேட் மூடப்பட்டதாலும் மீனாட்சி தியேட்டர் கேட் மற்றும் அடுத்து அடுத்து கேடுகள் இருப்பதால் ரயில் இதோ வந்துவிடும் அதோ வந்து விடும் என்று நினைத்து கிட்டத்தட்ட 45 நிமிடம் கழித்து கேட்டுகள் திறக்கப்பட்டதால் ரயில்வே கேட்டில் காத்திருந்த வாகன ஓட்டிகள் சிலர் மாற்று பாதையிலும் சிலர் அங்கேயே இருந்தும் ரயில் கடந்த சென்ற பின் சென்றனர்.