• Fri. Apr 26th, 2024

அபுதாபி ட்ரோன் தாக்குதல் – 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

அபுதாபி ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு.
முக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில், விமான நிலையத்தில் புதியதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் விமான நிலையத்தில் இருந்த 3 எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும், ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானை சேர்ந்த நபர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் படுகாயமைடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *