• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மாணவர்களால் ஆதார், சான்றிதழ் வழங்கும் விழா

ByN.Ravi

Aug 18, 2024

மதுரை தத்தனேரி வட்டாரப் பகுதிகளில், குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பொது
மக்களுக்கு, ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண் அவசியம் தேவை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நிரல் சமூக நலத்துறை நிர்வாகி (ஒன் ஸ்டாப் சென்டர்) டயானா புனிதவதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், அமெரிக்கன் கல்லூரி சமூக பணித் துறை மாணவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து, இணையதளத்தின் மூலம் இலவசமாக ஆதார் அட்டைகள், பேன் கார்ட், சாதிச் சான்றிதழ் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட இ-சேவை வழியாக வழங்கினார்கள்.

மேலும், சமூக பணியைச் சார்ந்த அமெரிக்கன் கல்லூரி உதவி பேராசிரியர் ஜான் சாலமோன் மற்றும் மதுரை சம பராமரிப்பு அறக்கட்டளையுடன் (எம்.இ.சி.எஃப்) ஆகியோர், மதுரை சக்கிமங்கலம் அருகே உள்ள எல்.கே.பி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளியில் பயிலும் முறைகள் கல்வி கற்பதற்கான வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்கள்.

இம்முகாமினை, (எஸ்.எல்.பி.என்.எஸ்) பெண்கள் நலச் சங்கத்தினர், அமெரிக்கன் கல்லூரி சமூக பணி மாணவர்கள் மகேஸ்வரர், கிருஷ்ண வேணி, பாலமுருகன், தீப் படேல், கேசவமூர்த்தி, முத்துமணி, ஸ்ரீமதி மற்றும் விஜய்தர்ஷன் ஆகியோர்கள் ஒருங்கிணைத்து, சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.