• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

கார் மோதியதில் சம்பவ இடத்தில் வாலிபர் பலி..,

ByKalamegam Viswanathan

May 16, 2025

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது30). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் முடுவார்பட்டி சாலை வழியாக மதுரைக்கு தனது நண்பருடன் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வெள்ளையம்பட்டி – முடுவார்பட்டிபிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த சுமோ கார் ஒன்று கணேசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த அடிபட்டு கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இச்சம்பவம் குறித்து பாலமேடு போலீசார் கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருசக்கர வாகனம் மீது சுமோ கார் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.