• Tue. Apr 30th, 2024

15 நிமிடம் இசைக்கு இடை விடாமல் 1120 மாணவர்கள் பங்கேற்கும் உலக சாதனை நிகழ்ச்சி…

ByKalamegam Viswanathan

Aug 24, 2023

மதுரை பெருங்குடியில் உள்ள அமுதம் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 2000 மாணவர்கள் படித்து வருகின்றனர். கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் சாகியா அறக்கட்டளை இணைந்து மாணவர்களிடையே அன்புடன் அரவணைத்துக் கொள் என்ற கருத்துக்களைக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 1120 மாணவர்களைக் கொண்ட சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

அமுதம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 1120 மாணவர்களை கொண்டு தொடர்ந்து 15 நிமிடங்கள் நடனம் ஆடி அன்பு சின்னத்தை மாணவர்களால் உருவாக்கி சாதனை படைத்தனர்.

மாணவர்களிடையேஅன்பு. சமத்துவம்,சகோதரத்துவம், அரவணைப்பு ஆகியவற்றை குறிக்கும் வகையில் சுய அன்புடன் தன்னை அரவணைத்துக் கொள் என்ற கருத்தினை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 15 நிமிடம் பாடல் நடனம் ஆடி அன்பு சின்னத்தை உருவாக்கினார் மாணவர்களின் இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களை கண்கவரும் விதமாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் யுனிவர்சல்.புக்.ஆப். ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம்.புக். ஆப்.ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மாணவர்களை கொண்டு அன்பு சின்னத்தை உருவாக்கினர் அவர்களின் சாதனையை பாராட்டி பள்ளி நிர்வாகிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் பதக்கங்கள் வழங்கினர்.

பாரா ஒலிம்பிக் போட்டி மற்றும் சர்வதேச போட்டியில் தங்கம் பதக்கங்களை வென்ற அர்ஜுன விருது பெற்ற ஜெர்லின் அனிகா மற்றும் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டு தலைவர் பாபு பாலகிருஷ்ணன் சாய்க்கியா அகாடமி இயக்குனர் செந்தில் லிங்கம். பள்ளி தாளாளர் பாண்டியன் மற்றும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சாதனை நிகழ்ச்சியில் உலக வரலாற்றிலேயே பள்ளியில் பள்ளி மாணவர்களால் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி புதிய சாதனை முயற்சியாக அமைந்தது என அமுதம் பள்ளி முதல்வர் ஜெயரூபா தெரிவித்தார். மாணவர்கள் அனைவரும் இதயம் போல் உருவமாக ஒன்றிணைந்து நின்றது பார்வையாளர்களிடம் அன்பை பற்றி உணர்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *