மதுரை கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இருளப்பா கோவில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 42) என்பவரை முன்விரோதம் காரணமாக அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகம் அருகே நான்கு பேர் கொண்ட கும்பல் வாளால் பாலகிருஷ்ணனின் தலை மற்றும் மணிக்கட்டு பகுதிகளில் பலமாக வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக வெட்டு காயங்களுடன் தப்பிச் சென்ற பாலகிருஷ்ணன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்து வந்த மதுரை கீரை துறை துணை ஆய்வாளர் சந்தான போஸ் தலைமையில் ஆனா போலீசார் பாலகிருஷ்ணன் புகார் மனுவை பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் மதுரை கீரை துறை போலீசார் தீவிர விசாரணை நடாத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்,
பாலகிருஷ்ணனுக்கு கருப்பசாமி என்பவருக்கும் கடந்த மாதம் கோவில் கணக்கு வழக்கு தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது அதன் எதிரொலியாக பாலகிருஷ்ணனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கருப்பசாமி கொலை செய்ய திட்டமிட்டு இன்று கொலை செய்த முயற்சி செய்ததாக தெரிய வருகிறது.