
எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் விருதை வழங்கியதையொட்டி தெப்பக்குளத்தில் சௌராஷ்ட்ரா கிளப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித்துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே தமிழரசன் ,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது;
தமிழகத்தில் பல்வேறு புரட்சிகரமான சாதனை திட்டங்களை எடப்பாடியார் வழங்கியதால், புரட்சித்தமிழர் என்ற பட்டத்தை மதுரை மக்கள் சூட்டினார்கள் ஆனால் அவர் என்ன சாதனை செய்தார் என்று சில ஞானசூனியங்கள் பேசி வருகிறார்கள், அவர் செய்த சாதனைத் திட்டங்களை படித்துப் பார்த்தாலே தெரியும் அந்த பட்டத்திற்கு அவர் தகுதியானவர் என்று.
அது மட்டும் அல்ல மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் உலக பொதுமறையாகவும், தேசிய திருமுறையாகவும் விளங்கும், திருக்குறளை தேசிய நூலகமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழ்நாட்டிலும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் மொழியை கட்டாயமாக பாட மொழியாகவும், பயின்று மொழியாகவும் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து 9,10, 11, 12, 13, 14, 15 ஆகிய தீர்மானங்கள் திமுக அரசை கண்டித்தும், ஸ்டாலினை கண்டித்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் 16வது தீர்மானம் கட்சத்தீவை மீட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொய் மூட்டைகளை ஸ்டாலின் அவிழ்த்து விட்டு, திமுக அரசு தாரைவார்த்து கொடுத்ததை திருப்பி மாற்றி எழுத ஸ்டாலின் முயற்சிக்கிறார். இந்த கட்சதீவு பிரச்சனையில் கூட அம்மா இருக்கும் பொழுது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது அதில், வருவாய்த் துறையும் அதில் இணைக்கப்பட்டது .அந்த கட்ச தீவை மீண்டும் மீட்டு தர மத்திய அரசுக்கும்,மாநில அரசுக்கும் கோரிக்கை இதில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்மாவின் ஆட்சி மலர தொடர்ந்து அயராது களப்பணி ஆற்றிவரும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து இதுவரை யாரும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் அமைக்கும் வியூகத்தின் படி செயல்படவும் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைக்கவும் இதில் சூளுரை ஏற்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் தெரிந்தும் தெரியாமல், அறிந்தும் அறியாமல், புரிந்தும் புரியாமல், ஊடக விவாதங்களில் சிலர் பேசி வருவதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை நகைச்சுவையாக தான் பார்க்கிறார்கள.
மென்பொருள் உற்பத்தியில் முதலிடத்தில் வந்ததாக முதலமைச்சர் கூறுகிறார், ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியும் இன்றைக்கு தமிழகத்தில் கடன்சுமை முதலிடத்தில் உள்ளது.
ஸ்டாலின் பொய் மூட்டைகளை யாரும் நம்ப தயாராக இல்லை அதை மட்டும் அல்ல,அவரின் வாரிசு உதயநிதியும் பேச்சையும் யாரும் நம்ப தயாராகவில்லை.
ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் நீட் தேர்வு ரத்து செய்வார் என்று உதயநிதி கூறுகிறார். கடல் வற்றி கருவாடு திங்கலாம் என்று கொக்கு நினைத்து ,கடைசியில் குடல் வற்றி இறந்தது போல் திமுகவின் பேச்சு உள்ளது. சந்திரயான் 3 நிலவில் சாதனை படைத்துள்ளது. எடப்பாடியார் தலைமையிலான நடைபெற்ற மாநாடு பூமியில் சாதனை படைத்துள்ளது என்று கூறினார்.
- BSNL சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவியப்போட்டி…மதுரையில் அக்டோபர் 1 BSNL தினத்தை முன்னிட்டு, மதுரை BSNL சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான … Read more
- குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் விஜய்வசந்த் எம். பி பங்கேற்பு..,கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் அடைக்காக்குழி பாத்திமாநகர் பகுதியில் இந்து மகா சபா சார்பில் விநாயகர் சதுர்த்தியை … Read more
- தொழில் முனைவோர் மற்றும் இளம் சாதனையார்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள்..,ஹியூமன் ரெயின்போ விஷ் பவுண்டேஷன் சார்பில், தொழில் முனைவோர் மற்றும் இளம் சாதனையார்களை கௌரவிக்கும் வகையில் … Read more
- ரூபாய் 8 கோடியில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம்..!கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான இந்த கோவில் … Read more
- மதுரை அண்ணாநகர் பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி…, பாதுகாப்பு கருதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே நிறுத்தம்…மதுரை அண்ணா நகர் பகுதியில் 5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “WOW MADURAI” என்ற தலைப்பில் … Read more
- உலக மோட்டார் சைக்கிள் தினம் மற்றும் மகள் தினம் (செப்டம்பர்24)யில் கன்னியாகுமரி, ஆந்திரமாநிலம் வரை இருசக்கர வாகனப்பயணம்.கன்னியாகுமரி- ஆந்திரமாநிலம் நெல்லூர், ஆங்கோர், ஹம்சலாதேவி வரை, இந்திய மோட்டார் சைக்கிள் டூர்ஸ் அசோசியேஷன் சார்பில், … Read more
- “ஒருங்கிணைந்த தையற் தொழில் கூடம் திறப்பு விழா”..!தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், ஆக்கத்தில் உருவான “வான்” … Read more
- சோழவந்தான் 8வது வார்டு இரட்டை அஹ்ரகாரத்தில் 12ம்ஆண்டு ராதாகிருஷ்ண கல்யாணம்..,சோழவந்தான் 8வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள … Read more
- பத்மஸ்ரீ இராஜா இராமண்ணா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 24, 2004)…இராஜா இராமண்ணா (Raja Ramanna) ஜனவரி 28, 1925ல் கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் … Read more
- விளையாட்டை வளர்க்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம்… ‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புகழாரம்..!“நம் தேசத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பாரம்பரிய கலைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை சத்குருவிடம் … Read more
- கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்..!சிவகங்கை மாவட்டம், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சிவகங்கை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் … Read more
- மதுரையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார், பாலத்தின் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து…மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள வி.ஓ.சி. பாலத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் … Read more
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை – வைகோ பேட்டிசென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை … Read more
- ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு..!‘உலகநாயகன்’ கமல்ஹாசனும், அவரது வாரிசும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர். … Read more
- அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … Read more
