• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று திருப்பரங்குன்றம் பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டம்..,

ByKalamegam Viswanathan

Nov 27, 2026

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்று, திருப்பரங்குன்றம் பகுதி பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தீர்ப்பிற்குத் தங்களது ஆதரவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பாகப் பொதுமக்கள் திரண்டனர்.

அங்கு தீர்ப்பை வரவேற்றுத் தேங்காய்கள் உடைத்தும், முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அந்த வழியாகச் சென்ற சக பொதுமக்களுக்கும், அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் பொதுமக்கள் இனிப்புகளை வழங்கித் தங்களது வரவேற்பைப் பதிவு செய்தனர்.