• Thu. Dec 12th, 2024

குப்பைக் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம்

உதகையில் குழந்தைகள் மையம் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைக் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
உதகை நகராட்சி உட்பட்ட 10 வார்டு சிலேட்டர் ஹவுஸ் பகுதியில் அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் குழந்தைகள் மையம் இயங்கி வருகிறது.இந்த மையத்திற்கு நாள்தோறும் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் தங்கள் குழந்தைகளை விட்டு செல்கின்றனர்.

மேலும் இங்கு பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் குழந்தைகள் மையம் நுழைவு வாயில் முன்பு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் அப்பகுதியில் வழிந்தோடுவதால் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே 10வது வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளையும் வழிந்து ஓடும் கழிவு நீர் கால்வாயியையும் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.