• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்..,

BySubeshchandrabose

Mar 14, 2026

தேனி மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் ஊதியத்தை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்,

மேலும் பணி நிரந்தரம் வழங்க வழங்க வேண்டும் என்றும் முறையான விடுமுறை அளித்து பணி வரன்முறை படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து இரண்டு நாட்களாக காத்திருக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் மருத்துவ சுகாதார அலுவலகம் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.