• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வாட்ஸ்ஆப்பில் ஒரே ஒரு கிளிக் தான் ரூ. 21 லட்சம் அபேஸ்

ByA.Tamilselvan

Aug 25, 2022

வாட்ஸ் அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்தததின் மூலம் ரூ21 லட்சத்தை இழந்துள்ளார் ஆந்திராவை சேர்ந்தஆசிரியர் .
ஆந்திர மாநிலம் அன்னமய்யா என்ற பகுதியை அடுத்து மதனப்பள்ளி என்ற நகரத்தை சேர்ந்தவர் வரலக்ஷி (Varalakshi). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் தனது குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று வரலக்ஷிக்கு வாட்சப்பில் ஒரு புது எண்ணிலிருந்து லிங்க் ஒன்று வந்துள்ளது. மேலும் அதனுடன் அதனை கிளிக் செய்யுமாறு செய்தியும் வந்துள்ளது. இதனால், அவரும் அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். அவர் அதனை க்ளிக் செய்த பிறகு, சில மணித்துளிகளிலே அவரது மோபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.10 ஆயிரம் 20 ஆயிரம் என பணம் எடுத்ததிற்கான குறுந்செய்தி வந்துள்ளது.கிட்டத்தட்ட மொத்தம் 21 லட்சம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக காவல்துறையில் இது குறித்து புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரித்த அதிகாரிகள், அந்த லிங்க் ஒரு ஸ்கேம் என்பதை கண்டறிந்தனர். மேலும் அவரது வங்கிக் கணக்கும் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், ஹேக் செய்த நபரை தேடி வருகின்றனர். அதோடு இது போன்று ஏதேனும் லிங்க் வந்து கிளிக் செய்ய சொன்னால் அதனை தெரியாமல் செய்து விட வேண்டாம் என்றும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.