

இலங்கையில் நடைபெற்ற போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை அடைந்த ஈழப் போர் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் நிறைவடைந்தது. அதனால் அங்கு ஆண்டுதோறும் தமிழர்கள் ஒன்றுகூட்டி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இதன் ஒரு பகுதியாக சென்னை தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஹரிஷ் தலைமையில் ஆலந்தூர் எம் கே என் சாலையில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம் அலுவலகத்தில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் தமிழக வெற்றிக்கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இ சி ஆர் சரவணன் கலந்து கொண்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு படுத்தும் வகையிலும் போரில் உயிர் இழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் உறுதிமொழி ஏர்க்கப்பட்டது.

