• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Oct 13, 2026

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சுமீத் நிறுவனம் சார்பில் தற்போது 13,900 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகவும், அதில் வெறும் 500 ரூபாய் மட்டுமே தற்போது உயர்த்தி வழங்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மாவட்ட ஆட்சியர் வழங்கிய ரூ730 சம்பளம் உயர்வு வேண்டும்,
நிரந்தர வேலை வேண்டும், பணி நேரத்தை பணி சுமையை குறைக்க வேண்டும், வாரம் ஒரு முறை சம்பளத்துடன் கூடிய விடுமுறை வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை மற்றும் தொழில் பாதுகாப்பு வழங்க வேண்டும்,

சரியான சீருடை, கையுறை, சோப் வழங்க வேண்டும் ,தீபாவளிக்கு அட்வான்ஸ் தொகை ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும்,Esi விடுப்பு எடுத்தால் அதற்கு சம்பளம் வேண்டும் ,அரசு விடுமுறை நாட்களில் பணிக்கு வந்தால் இரண்டு நாள் சம்பளமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் துப்புரவு பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனையின் தூய்மை பணிகள் கேள்விக்குறியாகி உள்ளது.
எங்கள் கோரிக்கைகளை ஏற்காத வரை போராட்டமானது தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.