• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

Byவிஷா

Jan 21, 2024

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
இந்தியப் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது கடலில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியிலும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.