• Fri. Apr 19th, 2024

லாரிக்கு அடியில் படுத்து உறங்கியவர் மீது டயர் ஏறி இறங்கயதில் தலை நசுங்கி பலி

ByKalamegam Viswanathan

Apr 18, 2023

திருமங்கலம் அருகே லாரிக்கு அடியில் படுத்து உறங்கியவர் மீது லாரியின் பின்பக்க டயர் ஏறி இறங்கயதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான CCTV காட்சிகள். பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் அருகே லாரிக்கு அடியில் உறங்கிக் கொண்டிருந்த நபர் குறித்து அறியாமல் ஓட்டுநர் லாரியை இயக்கியதில் பின் பக்க டயர் ஏறி இறங்கியதில் லாரியின் கீழ் படுத்திருந்த நபரின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்., தற்போது அந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் பர்னிச்சர் பொருட்களை இறக்குவதற்காக கடந்த 15 ஆம் தேதி கண்டெய்னர் லாரி ஒன்று ராஜஸ்தானிலிருந்து அதிகாலை திருமங்கலம் வந்துள்ளது. பர்னிச்சர் கடை 10 மணிக்கு மேல் தான் திறக்கப்படும் என்பதால் திருமங்கலம் நகருக்கு வெளியில் ஒதுக்கு புறமாக லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஜாபர் (27) மற்றும் கிளீனர் குவாரிஷ்(25) ஆகியோர் லாரிக்குள் உறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரிக்கு அடியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் படுத்து உறங்கி உள்ளார். இத்தனை அடுத்து 12 மணியானதும் ஆண் நபர் ஒருவர் படுத்து லாரியின் கீழ் படுத்து உறங்கியதை அறியாத ஓட்டுநர் ஜாபர் லாரியை இயக்கியுள்ளார். இதில் பின்பக்க டயர் பால்ராஜ் தலையின் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தை கண்ட அவ்வழியாக வந்தவர்கள் கூச்சலடவே ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு இறங்கி வந்து பார்த்தபோது லாரிக்கடியில் அடையாளம் தெரியாத நபர் படுத்து உறங்கியது தெரியவந்தது.


இதனை தொடர்ந்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும்., வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது உயிரிழந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம் புலியைச் சேர்ந்த பால்ராஜ் (52) என்பதும் அவரும் லாரி கிளீனர் ஆக பணியாற்றி வந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும்., இவர் எதற்காக திருமங்கலம் வந்தார். லாரியில் அடியில் எதற்காக படுத்து உறங்கினார்.? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரிக்கு அடியில் படுத்து உறங்கிய நபரின் தலையில் லாரியின் பின்பக்க டயர் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது சம்பவத்தினுடைய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *