• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஐஆர்சிடிசியில் லட்சங்களை இழந்தவர் காவல்துறையில் புகார்

Byவிஷா

Feb 1, 2024

ஐஆர்சிடிசி என்ற இணையதளம் வாயிலாக ரூ.1.8 லட்சத்தை இழந்தவர் காவல்துறையில் புகார் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி நடைபெற்று இருப்பதாக தியாகராய நகர் காவல் துணை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதரன் தனது புகாரில், பயண டிக்கெட்டை ரத்து செய்வதற்காக ஐஆர்சிடிசி இணையதளத்தில் உதவி என்று பதிவிடப்பட்டிருந்த 9832603458 என்ற எண்ணுக்கு அழைத்துள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் வங்கி விவரங்களை வழங்க கேட்டுள்ளார். ஸ்ரீதரன் தனது வங்கி விவரங்களை வழங்க, சில நிமிடங்களில் ஸ்ரீதரன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.8 லட்சம் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ஐசுஊவுஊ இணையதளத்தில் பதிவிடப்பட்டு இருந்த மொபைல் நம்பர், ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? என்பது குறித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.