• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கிறிஸ்மஸ், புத்தாண்டுக்கு உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர ஓவிய கண்காட்சி

உதகையில் தனியார் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள ஓவியக் கண்காட்சியில் நாடு முழுவதிலிருந்து பல ஓவியர்களின் ஓவியங்கள் இடம்பெறவுள்ளது.
நீலகிரி மாவட்டம் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் என்பதால் இங்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவர சுற்றுலாத்துறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் உதகையில் உள்ள சோலோ ஆர்ட் கேலரியின் சார்பாக எல்க்ஹில் ஸ்டெல்லிங் ரிசார்ட்ஸ் ஹோட்டலில் ஓவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக காகிதங்களை கொண்டு உருவாக்கியுள்ள சிற்பங்கள், விலை உயர்ந்த கேன்வஸ் ஓவியங்கள் மற்றும் மண் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஓவியக் கண்காட்சியில் மேலும் பல பிரபல ஓவியங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.