• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கேமிராகளை ஆய்வு செய்து பாசில் என்ற நபர் கைது..,

ByAnandakumar

Apr 13, 2025

கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர் ஒருவரின் கார் தரைதளத்தில் நிறுத்தி இருந்த Honda City காரை கடந்த 06-ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம நபர் திருடி சென்றதை அடுத்து வழக்கு பதிவு செய்த பசுபதிபாளையம் காவல்நிலைய போலீசார் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க தேடி வந்தனர்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் 200க்கும் மேற்பட்ட Cctv கேமிராகளை காட்சிகளை ஆய்வு செய்தும், பழைய குற்றவாளிகளை பற்றி தீவிர விசாரணை செய்த நிலையில் பாசில் (வயது 35) என்பவர் தாமரை நகர், பெரிய குளத்து பாளையம் பகுதியைச் சார்ந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மற்றொரு அரசு மருத்துவரின் கார் கீழ் தளத்தில் நின்ற WagonR காரை திருடியதை ஒப்புக்கொண்டதின் பேரில் திருடுபட்ட இரண்டு கார்களையும் மீட்டும் Honda City, WagonR ஆகிய 2 கார்களை திருடிய வழக்கில் பாசில் கரூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.