


கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் வக்ஃப் வாரியச் சட்டத்திருத்த ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் வக்ஃப் வாரியச் சட்டத்திருத்த ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நாகராசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் “இஸ்லாமியப் பெருமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பாசறை மாநிலசெயலாளர் நன்மாறன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

