• Mon. Apr 28th, 2025

வனப்பகுதியில் எழும்பு கூடாக ஆண் சடலம்!!

ByG. Anbalagan

Apr 12, 2025

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேட்டுப்பாளையம் வனப்பகுதியில்
பழைய மரிக்கோடு ஆதிவாசி கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று எழும்பு கூடாக கிடப்பதை அறிந்த ஆதிவாசி மக்கள் குன்னூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் குன்னூர் வனத்துறையினர் மற்றும் குன்னூர் காவல் துறையினர் அடர்ந்த. வனப்பகுதிக்குள் ஒத்தை அடிப்பாதையில் சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று உடலை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டனர். தொடர்ந்து உடல் அழுகிய நிலையில் உள்ளதால் உடலை கொண்டுவர முடியாமல் இன்று அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்படும்.

சம்மந்தப்பட்ட வனப்பகுதி குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வனப்பகுதி என்பதாலும் சம்மந்தப்பட்ட ஊராட்சி குன்னூர் பர்லியார் ஊராட்சி என்பதாலும் கோவை மேட்டுப்பாளையம் காவல் துறை மற்றும் மேட்டுப்பாளையம் வனத்துறை நீலகிரி மாவட்டம் குன்னூர் வனத்துறை மற்றும் குன்னூர் காவல் துறை முன்னிலையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும். அதன் பிறகே முழு விவரம் தெரியவரும் என குன்னூர் DSP. ரவி மற்றும் குன்னூர் வனசரகர் ரவீந்தரநாத் தெரிவித்தனர்.

இதனால் பழங்குடியினர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.