



உதகை அருகே கல்லக் கொரை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை கன்றுக்குட்டியை வேட்டையாட பின் தொடர்ந்து சென்ற CCTV காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் வீட்டின் மாடியிலிருந்த நாயை மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த சிறுத்தை வேட்டையாடிச் சென்ற நிலையில் தற்போது கன்றுக்குட்டியை வேட்டையாட பின் தொடர்ந்து நடந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.


உதகை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
உதகை நகரில் மேட்டுச்சேரி,தீட்டுக்கல், எல்க்ஹில், நொண்டிமேடு,போன்ற பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தலையாட்டுமந்து எனும் பகுதியில் வீட்டு படிக்கட்டில் தூங்கிக் கொண்டிருந்த நாயை சிறுத்தை வேட்டையாடி சென்ற CCTV காட்சிகள் வெளியாகி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
நாள்தோறும் உதகையில் பல்வேறு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுவதால் நாய்கள், பூனைகள், பசு மாடுகளை வளர்த்து வரும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லக்கொரை என்ற கிராமத்தில் கன்றுக்குட்டி ஒன்று நடந்து சென்ற போது சிறுத்தை கன்று குட்டியை வேட்டையாட பின் தொடர்ந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் வீட்டு மாடியில் இருந்த நாயை மின்னல் வேகத்தில் தாவி வந்த சிறுத்தை கழுத்தை கவி வேட்டையாடி சென்றது. அப்போது மக்கள் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் கன்றுக்குட்டி பின்னால் சிறுத்தை நடந்து சென்ற வீடியோ காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால் உடனடியாக வனத்துறையினர் இந்த பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்த பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் .

