• Fri. Mar 29th, 2024

நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது-வடகிழக்கு பருவமழை துவக்கம்

ByA.Tamilselvan

Oct 17, 2022

வடகிழக்கு பருவமழைய துவங்குவதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கி இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இந்த மழை தான் தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் நல்ல பலனை தரும். இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை வருகிற 20-ந் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே இந்திய வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதற்கான சாதகமான சூழ்நிலைகள் தென்படத் தொடங்கி உள்ளதாகவும், முதலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியே வலுப்பெற்று அதிக மழையை கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தற்போது வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வருகிற 20-ந் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *