


சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பழமையான ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இந்த கோவிலில் பெருமாள் நான்கு கோலங்களில் காட்சி அளிக்கிறார்.
சிறப்பு மிக்க இந்த கோவிலில் பங்குனி திருவிழா பெற்று வருகிறது. இதில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பெருமாள் எழுந்தருள நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசத்துடன் தேரை பிடித்து இழுத்து மாடவீதிகளில் உலா வந்தனர்.
பக்தர்கள் தேங்காய் உடைத்தும் பாடல்கள் பாடியும் மஞ்சள் நீர் தெளித்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் நான்கு மாடவீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் நிலையை வந்தடையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டும் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் சங்கர் நகர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாட வீதிகளில் உலா வரும் தேர் சுமார் 12 மணியளவில் மீண்டும் கோயில் நிலையை வந்தடையும் .

