• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கண்காணிப்பு பணியின் மகத்தான வெற்றி..,

குமரி மாவட்டத்தின் மாவட்ட கண்காணிப்பாளர் பணியில் டாக்டர்.ஸ்டாலினின் அணுகுமுறை காவல் பணியில் பல்வேறு வித்தியாசமான அணுகுமுறை பொது மக்களால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.

குமரியில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் நிலை. ஒரு குடும்பத்தில் ஏற்படும் பாதிப்பு என்பதை கடந்து, ஒரு ஊரின்,மாவட்டத்தின் பாதிப்பு என்ற சிந்தனையை சமூகம் உணரவேண்டிய கட்டாயத்தை , காவல்துறையின் நடவடிக்கை எடுத்து வரும் வரிசையில்.

கன்னியாகுமரி ஒரு சுற்றுலா பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து. காவல்துறை துரிதமாக எடுத்த உடனடி நடவடிக்கையில் 30 கிலோ கஞ்சா காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி கைலாசபுரம் பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் விக்னேஷ்(22) திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் கார்த்திகேயன் (23) சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த
விஜயகுமார் என்பவரின் மகன் மனோஜ்குமார் (23) களக்காடு பார்வதி புரம் பகுதியை சேர்ந்த தளவாய் என்பவரின் மகன் மகேந்திரன் (19) மற்றும் (16)வயது இளைஞர் உட்பட ஐந்து பேரை காவல்துறை கைது செய்தனர்.

கன்னியாகுமரி துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமாரின் ஆலோசனையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், மேலும் பலர் தொடர்புடையவர்கள்
உள்ளார்கள் யார்.?யார்.? இதன் மூலம் யார் என்ற விசாரணையை தொடர்கின்றனர்.

கடந்த நான்கு மாதத்தில் மட்டுமே 103_வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 87 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.