• Thu. Apr 25th, 2024

கன்னியாகுமரி அனாதைமடம் திடலில் மாபெரும் பொருட்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகேயுள்ள அனாதைமடம் திடலில் கோடை விடுமுறையை குடும்பத்துடன் பொதுமக்கள் கொண்டாடிட மாபெரும் பொருட்காட்சியை மேயர் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்துக்கல்லூரி அருகே உள்ள அனாதை மடம் திடலில் ஆண்டுதோறும் ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் மாபெரும் பொருட்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெறும்,அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொருட்காட்சி இன்று ஆரம்பமானது இதனை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த பொருட்காட்சியில் குளிரூட்டப்பட்ட பிரமாண்ட ஐஸ் லேண்டு குகை, மிருகங்களின் தத்துரூபக் காட்சிகள் மேலும் குடும்பங்களுடன் வந்து செல்பி எடுத்துக் கொள்ள மைசூர் அரண்மனை, போன்ற பிரமிக்க வைக்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது, அதேபோன்று குழந்தைகளுக்கான பெரிய ராட்டினம், சிறிய ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன,மேலும் வீட்டு உபயோக பொருட்கள் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன,இந்த பொருட்காட்சியானது 45 நாட்களுக்கு மேலாக நடைபெறும் எனவும்,இந்த கோடை விடுமுறைக்கு இந்த பிரமாண்ட பொருட்காட்சியானது குமரி மக்கள் கோடைகாலத்தில் மாலை நேரத்தில் ஒரு வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சமாக நிறைந்துள்ளதாகவும்.கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *