• Wed. Mar 19th, 2025

கூத்தியார் குண்டு கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த நல்ல பாம்பு பத்திரமாக மீட்பு

ByKalamegam Viswanathan

Feb 6, 2024

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த கூத்தியார் குண்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியின் பின்புறம் உள்ள கழிவு நீர் தொட்டியில் நல்ல பாம்பு ஒன்று கிடப்பதை பார்த்த அந்த கம்பெனி ஊழியர் தியாகு என்பவர் திருநாரைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபுக்கு தகவல் கொடுத்தார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சினேக் பாபு நான்கடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று கழிவுநீர் தொட்டிக்குள் இரண்டு நாட்களுக்கு முன்பு தவறி விழுந்ததை அறிந்து அந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தார்.