• Tue. Feb 18th, 2025

வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை

Byகுமார்

Jan 21, 2025

மதுரையில் சாலையோர கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரிக்கை விடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான பாண்டியன்நகா் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் உள்ள சிமென்ட் சாலையில் சிறு வியாபாரிகள் சாலையோரக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம். கரோனா தீ நுண்மிப் பரவிய காலத்தில், அப்போதைய மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் இந்தக் கடைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சிலா் சாலையோரக் கடைகளை காலி செய்யுமாறு வற்புறுத்தினா். அவா்கள், அண்மையில் சாலையோரக் கடைகளை அகற்றி, பொருள்களை சூறையாடினா். இதனால், வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளானது.

இந்த அத்துமீறலில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், வியாபாரிகளிடம் சூறையாடப்பட்டப் பொருள்களை மீட்டு வழங்கி, மீண்டும் வியாபாரம் செய்ய வழிவகை செய்து, பாண்டியன்நகா் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.