

பிரேசிலில் 100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அதிசய விலங்கு மீண்டும் காடுகளில் தென்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது
உலகம் முழுவதும் பரிணாம வளர்ச்சியில் பல விலங்குகள் அழிந்து வரும் நிலையில், மனிதர்களாலும் பல உயிரினங்களும் வேட்டையாடப்பட்டு வருகின்றது.
பெரும்பாலான பல விலங்குகள் அழியும் தருவாயில் உள்ள நிலையில், 100 ஆண்டுகளில் மொத்தமாக அழிந்துவிட்டதாக கருதப்பட்ட விலங்கான டாபிர் இனம் ஒன்று தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 1914ம் ஆண்டில் இது கேமராவில் பதிவு செய்யப்பட்ட பின்பு, அப்பகுதியில் குறித்த விலங்கு தென்படவில்லை. பல ஆண்டுகளாக விலங்கு ஆர்வலர்களும் குறித்த விலங்கினை தேடியுள்ள நிலையில், தென்படாத காரணத்தில் அழிந்துவிடடதாகவே கருதப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இந்த விலங்கு பிரேசிலில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் காணப்பட்டுள்ளது.
ஒரு தாய் டாபிர் இரண்டு குட்டிகளுடன் செல்லும் காட்சியை சிலர், வித்தியாசமான உயிரினமாக தெரிந்ததால் படம் பிடித்துள்ளனர். அதன் மூலம் டாபிர் இன்னும் அழியவில்லை என்பது தெரியவந்துள்ளது.கடந்த 100 ஆண்டுகளில் யாருடைய கண்ணுக்கும் சிக்காமல் டாபிர்கள் வாழ்ந்தது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேலும் அங்குள்ள டாபிர்களை கண்காணித்து அவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

