சிவகங்கை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட மதுரை முக்கு எனும் இடத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சாமி தரிசனம் செய்து வழக்கம். இந்நிலையில் இந்த காளியம்மன் கோயிலுக்கு தினமும் வரும் பசு ஒன்று பூஜை முடியும் வரை கோயிலுக்கு வெளியில் நின்று காத்திருந்து. பின்னர் பூஜை முடிந்த பின் வழங்கும் பிரசாதத்தை சாப்பிட்டு செல்கிறது. இதனால் இந்த பசுவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.