• Mon. Mar 17th, 2025

கீழையூரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு 1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய தம்பதியினர்

ByKalamegam Viswanathan

Feb 27, 2025

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கீழையூர் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால் போதுமான கட்டிட வசதி, கழிப்பிட வசதி இல்லாமல் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
பொதுமக்கள் அரசிடம் முறையிட்டபோது, சுமார் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள இடத்தில் உயர்நிலைபள்ளி கட்டிடம் கட்ட முன்வந்தது, அந்த இடத்தில் பள்ளி கூடம் கட்டினால் பெண் குழந்தைகள் போய் வர பாதுகாப்பு இல்லை என்றும், தொலை தூரமாக இருப்பதாலும், இடுகாடு மற்றும் சுடுகாட்டை கடந்து செல்ல குழந்தைகள் பயந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி ஜி.கோபால கிருஷ்ணன் அவர்களிடம் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கேட்கவே அவரும், தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு பள்ளிகட்டிடம் கட்டி தருவதற்கு தனது மனைவி தமிழ்செல்வி பெயரில் உள்ள நஞ்சை நிலம் மேலூர் – திருப்பத்தூர் சாலையில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை 26ந் தேதி தாமாக முன்வந்து பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இடத்தை மேலூர் பத்திர பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்து தானமாக கொடுத்தார்கள். பொதுமக்கள், அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் பெ.செல்வி, பட்டதாரி ஆசிரியர்கள் இரா. முத்துப்பாண்டி, சாந்தினி, அமுதா, கலைச்செல்வி,பிரியா,அமுத நாயகி, யாஸ்மின், ஜெய ஜீவா,அஜந்தா, சந்திரா, இளநிலை உதவியாளர் அலியார்
பள்ளி அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் வேலு, ராஜா, கஜேந்திரன்,சதிஷ், பாண்டியகுமார், ராஜேந்திரன், பாபு, ரவி, திருவள்ளுவர் உடனிருந்தனார், பத்திர பதிவு செய்து கொடுக்க அலுவல உதவிகளை வழக்கறிஞர் வி. துரைபாண்டியன் முன் நின்று செய்து கொடுத்தார்.