• Fri. Nov 8th, 2024

கார் மீது மாநகராட்சி ஒப்பந்த லாரி மோதி விபத்து

ByKalamegam Viswanathan

Oct 27, 2024

நின்று கொண்டு இருந்த கார் மீது மாநகராட்சி ஒப்பந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. ஓட்டுநர் அலட்சியத்துடன் நடந்து கொண்டார்.
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 70 வது வார்டு பைபாஸ் ரோடு நேரு நகர் கருப்புசாமி கோவில் அருகே கோரை வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை ஜேசிபி எந்திரம் மூலமாக அடைப்புகளை எடுப்பதற்காக இரண்டு மிகப்பெரிய டாரஸ் மதுரை மாநகராட்சிக்கு ஒப்பந்தமான லாரி கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அப்பொழுது அதன் அருகில் சுமார் ஒரு 5 அடி தள்ளி ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இதை கவனிக்காத ஓட்டுநர் ரிவர்ஸ் எடுத்து பின் அந்த வாகனத்தை தர தர தேவை என எடுத்து சுமார் 10 அடி தூரத்திற்கு இழுத்து முன்னாள் உள்ள பம்பரை சேதப்படுத்தி உள்ளார். பின் வாகனத்தில் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வந்து ஏன் இப்படி செய்தார் என கேட்டதற்கு அலட்சியமாக பதில் சொல்லி சரி உனது லைசென்ஸ் கூடப்பா என்று கேட்டதற்கு அதெல்லாம் கொடுக்க முடியாது உங்களால் முடிந்ததை பாருங்கள் எனவும் என அலட்சிய போக்குடன் பதில் அளித்தார்.

இதுகுறித்து உடனடியாக மதுரை மாநகரப் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பொன் முனியாண்டி அவரை விசாரித்த பொழுது லைசன்ஸ் குடு என்று கேட்ட பொழுது லைசன்ஸ் என்னிடம் இல்லை எனவும் வேண்டுமென்றால் செல்லில் இருக்குது பார்த்துக் கொள்ளுங்கள் என அலட்சியத்துடன் அவரிடமே பதில் சொன்னார். அவர் கையில் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் அல்லது லைசன்ஸ் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.

இது போன்ற ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் வாகனங்களில் நம்பர் பிளேட் சரியாக இல்லை ஒரே மாதிரியாக அனைத்து வாகனங்களும் இருப்பதால் ஐ என் டி என அழைக்கப்படும் நம்பர் பிளேட் எந்த ஒரு வாகனத்திலும் பொருத்தப்படவில்லை. இதனால் விபத்தில் சிக்கும் பொழுது வாகனத்தை மாற்றிவிட அதிக அளவு வாய்ப்புள்ளது என மோட்டார் வாகன சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. மாநகராட்சி ஆணையாளர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து ஒப்பந்த வாகனங்களில் முறையான ஐ என் .டி என அழைக்கப்படும் நம்பர் பிளேட் இருக்க வேண்டும்.

மேலும் அதில் மதுரை மாநகராட்சி என போட்டுள்ளது. அதை இவர்கள் ஏதோ மாநகராட்சி ஊழியர்கள் என நினைத்துக் கொண்டு அனைவரிடமும் அலட்சியமாக பேசுகின்றனர். மதுரை மாநகராட்சி ஒப்பந்த வாகனம் என அதில் அடித்தால் சிறப்பாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை முன் வைக்கின்றனர்.

மேலும் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கையில் லைசன்ஸ் இல்லை கேட்டால் ஓனரிடம் இருக்கிறது ஓனர் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் கட்டாயமாக வாகனத்தில் உரிமையாளரின் பெயர் தொலைபேசி எண் அனைத்தும் இடம்பெற வேண்டும் ஆனால் எதுவும் அதில் இல்லை.

மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் வாகனங்களையும் பரிசோதனை செய்து இஞ்சின் நம்பர் சேஸ் நம்பர் மற்றும் பதிவு எண்ணை முறையாக இயக்குகிறாளா என்ன தணிக்கை செய்து தவறு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் அனைத்து ஓட்டுநர் கைகளில் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் கையில் நகலாவது இருக்க வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆணையாளர் கூடிய நடவடிக்கை எடுப்பாரா எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *