ராணிப்பேட்டையில் இருந்து கார்களை ஏற்றிக் கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை 9 மணியளவில், புதிய கார்களை ஷே-ரூம்களுக்கு ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த லாரி ஒன்று ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு வன்னிவேடு அருகே, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சென்னைக்கு புதிய கார்களை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் இருந்தவர்களையும், வாகன ஓட்டிகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளன நிலையில், தீயை போராடி அணைத்து, மேற்கொண்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.