• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

புயலுக்கு வாய்ப்பு? – வானிலை மையம் எச்சரிக்கை!!

ByA.Tamilselvan

Nov 14, 2022

நவம்பர் 16ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு – கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் 16ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில், அது கரையை நோக்கி நகரும் போது வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்றும் புயலாக வலுப்பெறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.