வைகை அணை நிரம்புவதால் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வைகை அணையின் சுற்றுவட்டார ப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது, அதேபோல கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. முல்லைபெரியாறு அணையிலிருந்தும் அதிகப்படியான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் வைகை அணை வேகமாக நிரம்பி 70.01 அடியை எட்டியது. இதன் காரணமாக இரவு 11மணிக்கு வைகை ஆற்றிலிருந்து 10,000 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்ககை ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆற்றில் இறங்கி குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.