• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக தலைகுப்புற விழுந்த கார்..

ByK Kaliraj

Jul 3, 2026

சாத்தூரிலிருந்து தாயில்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று கீழத்தாயில்பட்டியில் வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் காரில் வந்தவர்கள் சிவகாசியை சேர்ந்த நிஜந்தன் 36, ராஜபிரியா 30, தம்பதி தங்களது 4 வயது குழந்தையுடன் சாத்தூரில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

விபத்தில் லேசான காயத்துடன் 4 வயது குழந்தையுடன் தம்பதியினர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.